சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

என்னை சிறந்த மனிதராக மாற்றியது கிரிக்கெட்

கிரிக்கெட் விளையாட்டுதான் என்னை சிறந்த மனிதராக உருவாக்கியது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 6:21 am

கிரிக்கெட் விளையாட்டுதான் என்னை சிறந்த மனிதராக உருவாக்கியது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

கோவா தலைநகர் பனாஜியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிட்ஸ்-பிலானி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ராகுல் திராவிட் இது தொடர்பாக மேலும் கூறியது:

கிரிக்கெட்தான் என்னை சிறந்த மனிதராக உருவாக்கியது. அதை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர்தான் உணர்ந்தேன். வெற்றி, தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளேன் என்றார்.

தனது பள்ளி வாழ்க்கையில் தொடங்கி கிரிக்கெட் வாழ்க்கை வரையிலான காலங்களில் நடந்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிய திராவிட், தனது பள்ளி முதல்வரான பாதிரியார் கோயல்ஹோவையும் நினைவுகூர்ந்தார்.

தனது தந்தை தீவிரமான கிரிக்கெட் ரசிகர் என்று குறிப்பிட்ட திராவிட், "ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு அடுத்த தலைமுறையினர் விளையாட வழிவிடுவதற்கான நேரம் இது என்பதை உணர்ந்தேன். சிறு வயதில் எனது தந்தையின் ஸ்டுடியோவில் இருந்து கிரிக்கெட் வர்ணனை கேட்டுக்கொண்டிருந்ததைப் போன்ற மகிழ்ச்சியான தருணத்திற்கு இப்போது திரும்பியுள்ளேன்' என்றார்.

வெற்றி பெற லட்சக்கணக்கான வழிகள் இருக்கின்றன என்று கூறிய திராவிட், "நீங்கள் உலகின் முதல்நிலை நபராக இல்லாவிட்டாலும், உங்களின் லட்சியங்களில் வெற்றி கண்டுவிட்டாலே உங்கள் அளவில் நீங்கள் முதன்மையானவர்கள்தான்' என்றார்.