சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி

மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் முதல்முறையாக இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 7:00 am

மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் முதல்முறையாக இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஜெர்மனியின் மான்செங்கிளாட்பச் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் தரவரிசையில் தன்னைவிட முன்னிலையில் உள்ள ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.

ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் கோல் அடித்த ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அடுத்த 3-வது நிமிடத்தில் இந்தியாவின் மோனிகா கோலடிக்க, இரு அணிகளும் சமநிலையை எட்டின.

இதன்பிறகு 30-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்த ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் 34-வது நிமிடத்தில் இந்தியாவின் நவ்நீத் கெüர் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டின.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் கேத்தரியாவும் (41-வது நிமிடம்), ரீது ராணியும் (48-வது நிமிடம்) கோலடிக்க, இந்தியா 4-2 என்ற கணக்கில் வெற்றி கண்டது.