அமெரிக்காவின் கார்ல்ஸ்பாத் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டியில் பெலாரஸின் விக்டோரியா அசரென்கா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அசரென்கா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பிரான்செஸ்கா ஷியாவோனேவை வீழ்த்தினார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக முதல் சுற்றோடு வெளியேறிய அசெரன்கா, அதன்பிறகு இப்போதுதான் மீண்டும் டென்னிஸýக்கு திரும்பியுள்ளார்.
தரவரிசை அடிப்படையில் நேரடியாக இரண்டாவது சுற்றில் விளையாடும் வாய்ப்பை (பை) பெற்ற அசரென்காவுக்கு, இந்த வெற்றி அவருடைய பிறந்தநாள் பரிசாகவும் அமைந்தது. புதன்கிழமை அவருடைய 24-வது பிறந்த நாளாகும்.
மற்ற 2-வது சுற்று ஆட்டங்களில் செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் பிரிட்டனின் லாரா ராப்சனையும், இத்தாலியின் ராபர்ட்டா வின்ஸி 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் பெத்தானியே மடேக் சேன்ட்ûஸயும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.
இதேபோல் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இவர், தனது 2-வது சுற்றில் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் கஜகஸ்தானின் செஸில் கரடன்ட்சேவாவை சந்திக்கவுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

