ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 76.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது.
அந்த அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் சதமடித்தார்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் வியாழக்கிழமை தொடங்கிய இப்போட்டியில் இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை.
ஆஸ்திரேலிய அணியில் ஜேம்ஸ் பட்டின்சன், ஆஷ்டன் அகர், பில் ஹியூஸ் ஆகியோருக்குப் பதிலாக மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், சர்ச்சையில் சிக்கிய டேவிட் வார்னர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஷேன் வாட்சனும், கிறிஸ் ரோஜர்ஸýம் அந்த அணியின் இன்னிங்ûஸத் தொடங்கினர். வாட்சன் நிதானமாக ஆடியபோதும், ரோஜர்ஸ் அதிரடியாக விளையாடினார். இதனால் அவர் 49 பந்துகளில் அரைசதம் கண்டார். ஆஸ்திரேலியா 16.5 ஓவர்களில் 76 ரன்களை எட்டியபோது வாட்சன் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சர்ச்சைக்குள்ளான டி.ஆர்.எஸ்.: பின்னர் வந்த உஸ்மான் கவாஜா 1 ரன்னில் நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் ஆட்டமிழந்தார். அவர் ஸ்வான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் மட் பிரையரிடம் கேட்ச் ஆனார். கள நடுவர் அவுட் கொடுத்ததைத் தொடர்ந்து டிஆர்எஸ் மூலம் 3-வது நடுவரை அணுகினார் கவாஜா. ரீபிளேயில் பந்து பேட்டில் படாதபோதும், சப்தம் வந்ததன் அடிப்படையில் 3-வது நடுவர் அவுட் கொடுத்தார். இதனால் டிஆர்எஸ் முறை மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
ரோஜர்ஸ் 84: கவாஜாவைத் தொடர்ந்து கேப்டன் மைக்கேல் கிளார்க் களம்புகுந்தார். ஆஸ்திரேலிய அணி 129 ரன்களை எட்டியபோது ரோஜர்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 114 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்தார். இதையடுத்து கிளார்க்குடன் இணைந்தார் ஸ்டீவன் ஸ்மித்.
கிளார்க் சதம்: தொடர்ந்து சிறப்பாக ஆடிய கிளார்க் 67 பந்துகளில் அரைசதம் கண்டார். மறுமுனையில் ஸ்டீவன் ஸ்மித்தும் சிறப்பாக விளையாட 58.2 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா.
இங்கிலாந்து பெüலர்களை மிக நேர்த்தியாக எதிர்கொண்ட கிளார்க், டெஸ்ட் போட்டியில் தனது 24-வது சதத்தை (169 பந்துகளில்) அடித்தார். இது அவருடைய 94-வது டெஸ்ட் போட்டியாகும்.
ஆஸ்திரேலியா 76.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. கிளார்க் 169 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 100, ஸ்டீவன் ஸ்மித் 108 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர். இங்கிலாந்து தரப்பில் கிரீம் ஸ்வான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

