அனைத்து துறையிலும் வலுவான அணியாகத் திகழும் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வியின் பாதையில் ஆஸ்திரேலியா பயணித்து வருகிறது.
583 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2-வது இன்னிங்ûஸத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 83 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்துள்ளது. எனவே அந்த அணியின் தோல்வி தவிர்க்க முடியாததாகியுள்ளது.
லண்டனில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 361 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 128 ரன்களும் எடுத்தன.
இதைத் தொடர்ந்து 233 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ûஸத் தொடங்கியது. 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் எடுத்திருந்தது. ரூட் 178 ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ரூட் 180: 4-ம் நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பேர்ஸ்டோவ் 11 ரன்களுடனும், ரூட் 180 ரன்களுடனும் வெளியேறினர். ரூட் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக கேப்டன் குக் அறிவித்தார். அப்போது அணியின் ஸ்கோர் 7 விக்கெட் இழப்புக்கு 349 ரன்களாக இருந்தது.
583 ரன்கள் இலக்கு: இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இங்கிலாந்து 582 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 583 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
போட்டி முடிய இரு நாள்களுக்கும் குறைவாக இருந்த நிலையில், ஆட்டத்தை டிரா செய்யும் நோக்கத்துடன் ஆஸ்திரேலிய வீரர்கள் களம் இறங்கினர். ஆனால் தொடக்க வீரர் வாட்சனை 20 ரன்களிலேயே வெளியேற்றி, ஆஸ்திரேலியாவின் சரிவைத் தொடங்கி வைத்தார் ஆன்டர்சன்.
இதை முறையாகப் பயன்படுத்திய ஸ்வான், ரோஜர்ûஸ 6 ரன்களிலும், ஹியூûஸ 1 ரன்னிலும் வெளியேற்றினார். அப்போது அணியின் ஸ்கோர் 36.
க்வாஜா, கிளார்க் போராட்டம்: அணியின் சரிவைத் தடுக்க க்வாஜாவும், கிளார்க்கும் கடுமையாகப் போராடினர். ஒவ்வொரு பந்தையும் கவனமாகவே எதிர்கொண்டனர். இதனால், அணியின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்ததுடன், விக்கெட் வீழ்ச்சியும் தடுத்து நிறுத்தப்பட்டது.
ரூட் அபாரம்: நீண்ட நேரம் விளையாடி வந்த கிளார்க்-க்வாஜா பார்டன்ர்ஷிப்பை பிரித்த ரூட், இருவரையும் வெளியேற்றி இங்கிலாந்து அணியை மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்க வைத்தார். கிளார்க் 51 ரன்களிலும், க்வாஜா 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
83 ஓவர்கள் முடிவின்போது 9 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 226 ரன்கள் எடுத்துள்ளது.
பட்டின்சன் 33 ரன்களுடனும், ஹாரிஸ் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இங்கிலாந்து தரப்பில் ஸ்வான் 3 விக்கெட்டுகளையும், பிரஸ்னென், ஆண்டர்சன் மற்றும் ரூட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சுருக்கமான ஸ்கோர்
முதல் இன்னிங்ஸ்:
இங்கிலாந்து- 361
(பெல் 109, பேர்ஸ்டோவ் 67, ஹாரிஸ் 5வி/72)
ஆஸ்திரேலியா- 128 (வாட்சன் 30, கிளார்க் 28, ஸ்வான் 5வி/44)
2-வது இன்னிங்ஸ்:
இங்கிலாந்து- 349/7
டிக்ளேர் (ரூட் 180, பெல் 74, சிடில் 3வி/65)
வெற்றி இலக்கு 583
ஆஸ்திரேலியா- 226/9 (க்வாஹா 54, கிளார்க் 51, ஸ்வான் 3வி/78)
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

