தன்மீது வேண்டுமென்று அவதூறாகப் பிரசாரம் செய்யப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபகாலங்களில் நடைபெற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடாததால் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் நீக்கப்பட்டார். புதிய பயிற்சியாளராக அந்நாட்டின் முன்னாள் வீரர் லீமேன் நியமிக்கப்பட்டார்.
இருப்பினும் ஆர்தர் நீக்கப்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் மிக்கி ஆர்தர் கூறியதாவது:
பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளித்தது. இதன்மூலம் கடுமையாக பாதிக்கப்பட்டேன். எனது நீக்கம் குறித்து அணி நிர்வாகத்திடமிருந்து எவ்வித பதிலும் தரப்படவில்லை.
ஆஸ்திரேலிய அணியின் மூத்த நிர்வாகிகளை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றபோதும் பலனில்லை. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் என் மீது அவதூறாக சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். இருந்தபோதும், ஆஸ்திரேலிய நிர்வாகத்திடம் கண்ணியமான முறையில் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளவே விரும்புகிறேன். புதன்கிழமை நடைபெறவுள்ள சமாதானப் பேச்சு வார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
ஆஷஸ் தொடரில் சரிவிலிருந்து மீண்டு வர ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.
ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தடுமாறி வரும் வேளையில், அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் குற்றச்சாட்டு, அணி நிர்வாகத்துக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

