சீன ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மன்ஜீத் சிங் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் அவர் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
சீனாவின் கியாங் நகரில் நடைபெற்று வரும் 3-வது சீன ஓபன் குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் 91 கிலோவுக்கு மேற்பட்ட எடைப் பிரிவு அரையிறுதியில் மன்ஜீத் சிங், சீனாவின் வாங் ஜி பாவை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தார். மன்ஜீத் சிங், சனிக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் சீனாவின் அகீப்பீர் யூசுப்பை சந்திக்கிறார்.
52 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சுநீல் குமார், சீனாவின் சங் யாங்கிடமும், ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அஜய் குமார், சீனாவின் யூ லுன்ஹாயிடம், 75 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜெய்தீப், சீனாவின் ஜாவிடமும் தோல்வி கண்டனர். இதனால் அவர்கள் 3 பேருக்கும் வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

