சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த சாய்னா 21-17, 13-21, 13-21 என்ற செட் கணக்கில் 13-ம் நிலை வீராங்கனையான இந்தோனேசியாவின் லிண்டாவெனி ஃபேனட்ரியிடம் தோல்வி கண்டார்.
இதன்மூலம் இந்தோனேசிய ஓபன் போட்டியின் முதல் சுற்றில் சாய்னாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் லிண்டாவெனி.
தாய்லாந்து ஓபன், இந்தோனேசிய ஓபன், சிங்கப்பூர் ஓபன் என 3 முக்கிய போட்டிகளில் தொடர்ச்சியாக அதிர்ச்சி தோல்வி கண்டு சறுக்கலை சந்தித்துள்ளார் சாய்னா.
காலிறுதியில் சாய்னா தோல்வி கண்டதன் மூலம் சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகளின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
தரவரிசையில் சரிவு
இந்தோனேசிய ஓபன், சிங்கப்பூர் சீரிஸ் போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி கண்ட சாய்னா, தரவரிசையில் 2 இடங்களை இழந்து 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதேபோல் காயம் காரணமாக சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் போட்டியிலிருந்து விலகிய இந்தியாவின் பி.வி.சிந்து ஓர் இடத்தை இழந்து 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் காஷ்யப் ஓர் இடத்தை இழந்து 11-வது இடத்திலும், குருசாய் தத், அஜய் ஜெயராம் ஆகியோர் தொடர்ந்து முறையே 23 மற்றும் 25-வது இடங்களிலும் உள்ளனர்.
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த், 2 இடங்கள் முன்னேறி 42-வது இடத்தைப் பிடித்துள்ளார். சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் போட்டியில் இந்தோனேசியாவின் முன்னணி வீரரான தெளபிக் ஹிதாயத்தைத் தோற்கடித்த இந்தியாவின் சாய் பிரணீத் 16 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

