இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியான இந்திய வீராங்கனை சாய்னா நெவால் கடுமையாகப் போராடி வென்றார்.
சர்வதேச தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சாய்னா, 14-வது இடத்தில் உள்ள இந்தோனேஷிய வீராங்கனை லின்டாவினி ஃபனிட்ரியை எதிர்கொண்டார்.
உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் சாய்னாவுக்கு கடும் சவாலை அளித்தார் ஃபனிட்ரி. ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முதல் செட் தொடக்கத்தில் ஃபனிட்ரி 5-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். இதனால் சாய்னாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இறுதியில் 21-17 என்ற கணக்கில் முதல் செட்டை சாய்னா வென்றார். எனினும் இரண்டாவது செட்டில் கடுமையாகப் போராடிய ஃபனிட்ரி 29-27 என்ற கணக்கில் அதனை வென்றார்.
எனினும் இறுதி செட்டை 21-13 என்ற கணக்கில் சாய்னா கைப்பற்றி ஆட்டத்தில் வெற்றி பெற்றார். இப்போட்டித் தொடரில் 3 முறை பட்டம் வென்றுள்ள சாய்னாவுக்கு முதல் சுற்றே கடும் சவாலாக அமைந்தது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தருண் கோனா-அஸ்வின் பொன்னப்பா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

