சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

முதல் ஒருநாள் ஆட்டம்: இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நியூஸிலாந்து.

Updated On :2 ஜூன் 2013, 9:23 am

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நியூஸிலாந்து.

இங்கிலாந்தின் லார்ட்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணியில் கேப்டன் அலாஸ்டர் குக் 30, ஜொனாதன் டிராட் 37, ஜோ ரூட் 30, கிறிஸ் வோக்ஸ் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்தது.

நியூஸிலாந்து தரப்பில் டிம் செüதி 3 விக்கெட்டுகளையும், மெக்லீனாகான், நாதன் மெக்கல்லம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கப்டில் சதம்: பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோஞ்சி ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தபோதும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில் சதமடித்தார். அவருக்குப் பக்கபலமாக ராஸ் டெய்லர் 54 ரன்கள் சேர்த்தார்.

இதனால் நியூஸிலாந்து 46.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

மார்ட்டின் கப்டில் 123 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது நியூஸிலாந்து.

சுருக்கமான ஸ்கோர்

இங்கிலாந்து-227/9

(டிராட் 37, வோக்ஸ் 36, டிம் செüதி 3வி/37)

நியூஸிலாந்து-231/5

(கப்டில் 103*, டெய்லர் 54, ஆண்டர்சன் 3வி/31)