ஐபிஎல் சூதாட்டம், பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மருமகன் மெய்யப்பன் மீதான புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பிசிசிஐ விசாரணைக் குழுவை கலைக்கவேண்டும் என முன்னாள் தலைவர் ஏ.சி. முத்தையா வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிசிசிஐ செயலாளர் பொறுப்பில் இருந்து சஞ்சய் ஜக்டேல் விலகி உள்ளார். விசாரணைக் குழுவின் உறுப்பினரான அவர் பதவி விலகி விட்டதால், தற்போது அக்குழு இரு உறுப்பினர்களையே கொண்டுள்ளது.
சட்ட விதிமுறைகளின்படி விசாரணைக் குழு அமைக்கப்படவில்லை என்பதை அதை ஏற்படுத்தியவர்கள் உணர வேண்டும்.
சஞ்சய் ஜக்டேலுக்கு பதிலாக புதிதாக ஒருவரை குழுவில் நியமிக்காமலும், ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படாத வகையிலும் அக்குழுவை உடனே கலைக்க வேண்டும்.
பிசிசிஐ அமைப்பை ஒரு தனியார் கிளப் போல் கருத முடியாது. சீனிவாசன் உடனே பதவி விலக வேண்டும். பொது வாழ்வில் தூய்மையை கடைபிடிப்பதற்காக அவர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
கிரிக்கெட் வீரர்களை கட்டுப்படுத்தும் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளும் மேம்பட்டதாக விளங்க வேண்டும். கிரிக்கெட் வாரியம் இரட்டை வேடம் போடுவதாகவும், நிழல் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
விசாரணைக் குழுவின் செயல்பாட்டில் இருந்து தான் விலகி இருப்பேன் என சீனிவாசன் கூறினாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளரான அவர், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பதவி வகித்து வருகிறார்.
எனவே விசாரணை குழு தொடர்பாக எந்த கருத்து மோதலுக்கும் இடம் தரக்கூடாது.
விசாரணைக் குழுவை பிசிசிஐயின் எந்த அமைப்பு நியமித்தது எனத் தெரியவில்லை. விசாரணைக் குழு வரம்பு பற்றிய எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
பிசிசிஐ மற்றும் ஐபிஎல் சட்ட விதிமுறைகளின்படி விசாரணைக் குழுவை நியமிக்க பிசிசிஐக்கு அதிகாரம் இல்லை. ஐபிஎல் அணி உரிமையாளர்கள், முகவர்கள் மீது விசாரணை நடத்துவதற்காக குழு அமைக்க முடியாது.
வீரர்கள், நடுவர்கள், அணி நிர்வாகிகள், போட்டி அமைப்பாளர்கள், தேர்வாளர்கள் ஆகியோர் மீதான புகார்கள் குறித்தே பிசிசிஐ அமைப்பால் விசாரிக்க முடியும் என்றார் முத்தையா.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

