தேசிய சீனியர் ஹாக்கிப் போட்டியில் சர்வீசஸ் அணி 28-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியுள்ளது.
புணேவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கோவாவை எதிர்கொண்டது சர்வீசஸ் அணி. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சர்வீசஸ் அணி, ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது.
அதன்பிறகு தொடர்ச்சியாக கோலடித்த அந்த அணி, கடைசி நிமிடத்துக்கு முன்பு வரை கோல் மழையை பொழிந்தது.
அதேநேரத்தில் கடைசி வரை கோவா அணியால் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை. இதனால் சர்வீசஸ் 28-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது. அந்த அணியில் அன்வர் 8 கோல்களையும், சிராஜூ 6 கோல்களையும் அடித்தனர்.
சாய் அணி வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) அணி 9-0 என்ற கோல் கணக்கில் பிகாரை தோற்கடித்தது. நம்தாரி லெவன் அணி தொடர்ந்து 3-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அந்த அணி 8-2 என்ற கோல் கணக்கில் சஷத்ரா சீமா பால் அணியை தோற்கடித்தது.
சத்தீஸ்கர் அணி 7-3 என்ற கோல் கணக்கில் திரிபுராவையும், அசாம் அணி 10-0 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தானையும் தோற்கடித்தன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

