ஸ்பாட்-பிக்ஸிங், மேட்ச்-பிக்ஸிங் நடைபெறுவதைத் தடுக்க புதிய சட்டங்கள் இயற்றும் அரசின் முடிவுக்கு ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியது: ஸ்பாட் பிக்ஸிங், மேட்ச் பிக்ஸிங் நடைபெறுவதைத் தடுக்க சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று பிக்ஸிங் நடைபெறுவதை குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது வரவேற்கப்பட வேண்டியது.
கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல், மற்ற விளையாட்டுகளிலும் இதுபோன்று பிக்ஸிங் நடைபெறுவதைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை.
கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் "ஜென்டில்மேன்' விளையாட்டாகவே இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உலகில் பல்வேறு விளையாட்டுகளில் இதுபோன்ற குற்றச்சாட்டில் சிக்கிய வீரர்களுக்கு விளையாட்டு அமைப்புகள் மன்னிப்பு அளித்துள்ளன.
ஆனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவ்வாறு மன்னித்தது இல்லை. மாறாக, வீரர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் பிசிசிஐ மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்கிறது என்று தெரிவித்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

