சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இந்தியாவுடனான போட்டி சிறப்பு வாய்ந்தது: ஹபீஸ்

இந்திய கிரிக்கெட் அணியுடன் எத்தகைய போட்டியில் விளையாடினாலும் அது சிறப்பு வாய்ந்தது என்று பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர்

Updated On :22 மே 2013, 7:22 am

இந்திய கிரிக்கெட் அணியுடன் எத்தகைய போட்டியில் விளையாடினாலும் அது சிறப்பு வாய்ந்தது என்று பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி (மினி உலகக் கோப்பை) போட்டியில் பங்கேற்கும் எட்டு அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் வீரர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக ஹபீஸ் கூறியது:

மினி உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியுடன் மோதும் ஆட்டத்தை எதிர் நோக்கியுள்ளோம். இந்தியாவுடன் விளையாடும் அனைத்து போட்டிகளும் சிறப்பு வாய்ந்தவை. இத்தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்.

இந்தியாவுடன் விளையாடும்போது உள்ள சூழல் வித்தியாசமானதாக இருக்கும். அதில் விளையாட ஆர்வமாக இருக்கும். இங்கிலாந்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் எங்களை உற்சாகப்படுத்துவர் என்று தெரிவித்தார்.