சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வார்னர் அதிரடி: டெல்லிக்கு 3-வது வெற்றி

கொல்கத்தா நைட் ரைடர்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது டெல்லி டேர்டெவில்ஸ்.

Updated On :2 மே 2013, 9:17 am

கொல்கத்தா நைட் ரைடர்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது டெல்லி டேர்டெவில்ஸ்.

இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணி, தற்போது 3-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முதலில் பேட் செய்த நடப்பு சாம்பியன் நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய டேர்டெவில்ஸ் 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் கேப்டன் கம்பீர் பேட்டிங்கை தேர்வு செய்தார். மன்விந்தர் பிஸ்லாவும், கம்பீரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

கம்பீர் ரன் அவுட்: முதல் ஓவரின் முதல் பந்தில் பிஸ்லா பவுண்டரி அடிக்க, அடுத்த பந்தில் கம்பீர் ஆட்டமிழந்தார். அவர் ஒரு பந்தைக்கூட சந்திக்காத நிலையில், இர்ஃபான் பதானால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதன்பிறகு அந்த அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது. பிஸ்லா 4, யூசுப் பதான் 20, மோர்கன் 10, காலிஸ் 12 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது நைட் ரைடர்ஸ்.

இதன்பிறகு வந்த தேவவிரத தாஸ் 18, சமித் நர்வால் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ரஜத் பாட்டியா-பிரெட்லீ ஜோடி 10 பந்துகளில் 22 ரன்களை விளாச, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்தது நைட் ரைடர்ஸ்.

நெஹ்ரா வீசிய கடைசி ஓவரில் பிரெட் லீ இரு சிக்ஸர்களை விளாசினார். பிரெட் லீ 6 பந்துகளில் 16, ரஜத் பாட்டியா 26 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வார்னர் விளாசல்: பின்னர் ஆடிய டெல்லி அணியில் சேவாக் 17, கேப்டன் ஜெயவர்த்தனா 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் உன்முக்த் சந்த்-டேவிட் வார்னர் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய வார்னர் 35 பந்துகளில் அரைசதம் கண்டார். உன்முக்த் 39 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது.

இறுதியில் அந்த அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. வார்னர் 42 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 66, பென் ரோஹெர் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சுருக்கமான ஸ்கோர்

கொல்கத்தா-136/7

(பாட்டியா 26*, நர்வால் 23, யூசுப் பதான் 20, உமேஷ் யாதவ் 2வி/36)

டெல்லி-137/3

(வார்னர் 66*, உன்முக்த் சந்த் 37, பிரெட் லீ 1வி/26)