சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மலேசிய பாட்மிண்டன்: காலிறுதியில் சிந்து

மலேசிய கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Updated On :2 மே 2013, 6:38 am

மலேசிய கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் பி.வி.சிந்து 21-13, 19-21, 21-13 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் செனா ஜியாவூனை தோற்கடித்தார். வியாழக்கிழமை நடைபெறும் காலிறுதியில் ஹாங்காங்கின் சியூங் நகனை சந்திக்கிறார் சிந்து.

3-வது சுற்றில் குருசாய் தத்: ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் குருசாய் தத் 21-8, 21-9 என்ற நேர் செட்களில் மலேசியாவின் கியான் ஜின் கோவையும், சமீர் வர்மா 21-15, 16-21, 21-19 என்ற செட் கணக்கில் மலேசியாவின் வெய் ஃபெங் சாங்கையும் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

இதேபோல் இந்தியாவின் ஸ்ரீகாந்தும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் 2-வது சுற்றில் 21-9, 21-19 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் சுப்பான்யூவை தோற்கடித்தார். அதேநேரத்தில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் 21-15, 14-21, 15-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஜைனுதீனிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.