ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் அலேக்கின் சர்வதேச செஸ் போட்டியின் 8-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்துள்ளார். இதன்மூலம் அவர் 4.5 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
9 சுற்றுகள் கொண்ட இப் போட்டியில் முதல் 5 சுற்றுகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற நிலையில், அடுத்த 4 சுற்றுகள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள ரஷிய அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் புதன்கிழமை நடைபெற்ற 8-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷியாவின் பீட்டர் ஸ்விட்லரை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மிகவும் கவனமாக விளையாடிய பீட்டர் ஸ்விட்லர், அனைத்து நகர்த்தலிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இதனால் 35-வது நகர்த்தலில் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்தப் போட்டியில் வெள்ளைக் காய்களுடன் விளையாடிய ஆட்டங்களில் இரு வெற்றிகளைப் பெற்றிருந்த ஆனந்த், இந்த ஆட்டத்திலும் வெள்ளைக் காய்களுடன் விளையாடினார். அதனால் இதில் அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிராவில் முடிந்தது. இந்தப் போட்டியில் ஆனந்த் 5-வது முறையாக டிரா கண்டுள்ளார்.
போரீஸ் கெல்பான்ட் முன்னிலை: இன்னும் ஒரு சுற்று மட்டுமே எஞ்சியுள்ளது. தற்போதைய நிலையில் இஸ்ரேலின் போரீஸ் கெல்பான்ட் 5 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றுள்ளார்.
இந்தியாவின் ஆனந்த், பிரான்ஸின் மேக்ûஸம் வச்சியர், ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியன், இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ் ஆகியோர் தலா 4.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளனர். ரஷியாவின் நிகிதா, பிரான்ஸின் லாரன்ட் ஃபிரெஸ்ஸினெட் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், விளாதிமிர் கிராம்னிக் 3.5 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், சீனாவின் டிங் லிரென் 3 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், ரஷியாவின் பீட்டர் ஸ்விட்லர் 2.5 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.
ஆனந்த்-கெல்பான்ட் மோதல்
கடைசிச் சுற்றில் இந்தியாவின் ஆனந்தும், இஸ்ரேலின் போரீஸ் கெல்பான்டும் சந்திக்கின்றனர். இது கடந்த ஆண்டு ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கெல்பான்டை வீழ்த்தி ஆனந்த் 5-வது முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

