விளையாட்டில் அரசியல் கலப்பதால், அதன் வீரியம் பாதிக்கப்படாது என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சங்ககாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஆந்திர மாநிலம், ஹைதராபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் செய்தியாளர்களிடம் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியது:
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் விளையாட்டின் வீரியம் பாதிக்காது. எங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என்றாலும், இந்தியாவின் பிற பகுதி ரசிகர்கள் வரவேற்கத் தயாராக உள்ளனர் என்று தெரிவித்தார்.
பேட்டியின்போது அணியின் பலம் குறித்து அவர் கூறுகையில், அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயினும், இந்தியாவின் இஷாந்த் சர்மாவும் உள்ளது பலம். கடந்த ஆண்டு எங்கள் அணி சர்மாவை இழந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சர்மா சிறப்பாகச் செயல்பட்டார். அதேபோல், கடந்த 4 ஆண்டுகளாக ஸ்டெயினின் ஃபார்ம் சிறப்பாக உள்ளது. முதல் ஆட்டத்தில் ஷிகர் தவண் ஆடாதது ஏமாற்றமே. அவருக்குப் பதிலாக புதிய வீரர்கள் விளையாடுவர் என்று தெரிவித்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

