தில்லி டெஸ்ட் போட்டியில் அஜிங்க்யா ரஹானே விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: ரஹானேவுக்கு நீண்ட காலமாக வாய்ப்பு கொடுக்காமல் வெளியில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். இது வீரர்களின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல.
தில்லி போட்டியில் ரஹானே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும். சேதேஷ்வர் புஜாரா 3-வது வீரராக களமிறங்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் தோல்வி கண்டால் அதற்காக ஆச்சரியப்படமாட்டேன்.
இந்தப் போட்டி முடிந்ததும், அடுத்ததாக ஐபிஎல் போட்டி தொடங்கிவிடுகிறது. அது முடிந்த அடுத்த சில நாள்களில் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறவுள்ளது.
தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடுவது கடினமானதுதான். எனினும் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்திய வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

