சென்னையில் நடைபெற்று வரும் தேசிய கிளப் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் டேராடூன் ஓ.என்.ஜி.சி. அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
சென்னை பைக்கர்ஸ் வாலிபால் கிளப் சார்பில் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் நடைபெற்று வரும் இப் போட்டியில் ஆடவர் பிரிவில் 8 அணிகள், மகளிர் பிரிவில் 4 அணிகள் என மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் 4-வது நாளான வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் பிரிவு லீக் ஆட்டத்தில் டேராடூன் ஓ.என்.ஜி.சி. அணி 23-25, 25-12, 25-16, 25-18 என்ற செட் கணக்கில் ஹரியாணா எச்.எஸ்.ஐ.ஐ.டி.சி. அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ஓ.என்.ஜி.சி. அணி 3 வெற்றிகளுடன் "ஏ' பிரிவில் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
மகளிர் பிரிவு: மகளிர் பிரிவு லீக் ஆட்டத்தில் சென்னை தெற்கு ரயில்வே அணி 25-20, 25-16, 22-25, 25-13 என்ற செட் கணக்கில் ஹைதராபாத் மேயர்ஸ் கிளப் அணியை தோற்கடித்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

