மல்யுத்தத்தை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவ வேண்டும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
"ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 70 நாடுகளும் மல்யுத்த விவகாரம் குறித்து பிரச்னையை கையிலெடுக்க வேண்டும். அதற்காக அந்நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை ஈடுபடுத்த வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவ வேண்டும், என்று ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டார்.
மக்களையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.
"2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தை மீண்டும் சேர்ப்பதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பழமையான விளையாட்டான மல்யுத்தம் நீக்கப்பட்டது எந்த அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்று அரசு நன்கு உணர்ந்துள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.
2020-ம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலிருந்து மல்யுத்த விளையாட்டை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் சமீபத்தில் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

