மாநில அளவிலான ஒருநாள் நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. செந்தமிழன் இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
ஆடவர், மகளிர் என இரு பிரிவினருக்கும் மொத்தம் 8 பிரிவுகளில் இப் போட்டி நடத்தப்படுகிறது.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 200 வீராங்கனைகள் உள்பட 550 பேர் பங்கேற்கின்றனர். போட்டி காலை 7.30 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது.
இப் போட்டிக்கு எவ்வித அனுமதிக் கட்டணமும் கிடையாது. போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கப்படவுள்ளது.
மேற்கண்ட தகவல் வேளச்சேரி நீச்சல் குள மைதான அலுவலர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

