சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சர்வதேச செஸ்: கெல்பான்டுடன் ஆனந்த் 2-வது டிரா

ஜூரிச் செஸ் சேலஞ்ச் போட்டியின் 5-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் போரிஸ் கெல்பான்டுடன் டிரா செய்தார். இந்தப் போட்டியில்

Updated On :2 மார்ச் 2013, 8:20 am

ஜூரிச் செஸ் சேலஞ்ச் போட்டியின் 5-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் போரிஸ் கெல்பான்டுடன் டிரா செய்தார். இந்தப் போட்டியில் கெல்பான்டுடன் ஆனந்த் 2-வது முறையாக டிரா செய்துள்ளார்.

ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியின் 4-வது சுற்றில் இத்தாலியின் ஃபேபியானோ கருணாவிடம் தோல்வி கண்ட ஆனந்த், இதுவரை ஒரு வெற்றிகூட பெறவில்லை.

இன்னும் ஒரு சுற்று மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இத்தாலியின் ஃபேபியானோ கருணா 3 புள்ளிகளுடன் முதலிடத்திலும், போரிஸ் கெல்பான்ட், முன்னாள் உலக சாம்பியனான ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக் ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆனந்த் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.