டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 8,000 ரன்கள் எடுத்த 2-வது இங்கிலாந்து வீரர் என்ற மைல்கல்லை ஜோ ரூட் அடைந்தார்.
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் காலேவில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார். இந்த இன்னிங்ஸில் 228 ரன்கள் குவித்த அவர், 8,000 டெஸ்ட் ரன்களை எட்டிய 7-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
அதேசமயம், இங்கிலாந்து ஜாம்பவான் அலெஸ்டர் குக்கைப் பின்னுக்குத் தள்ளி குறைந்த இன்னிங்ஸில் (178 இன்னிங்ஸில்) 8,000 டெஸ்ட் ரன்களை எட்டிய 2-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் 8,000 டெஸ்ட் ரன்களை 176 இன்னிங்ஸில் எட்டியதே சாதனையாக உள்ளது.
மேலும் இலங்கையில் இரட்டைச் சதம் அடிக்கும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் ரூட் படைத்துள்ளார். இதற்கு முன்பு 2012-இல் பீட்டர்சன் 151 ரன்கள் அடித்ததே இலங்கையில் ஒரு இங்கிலாந்து வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


