சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரூட் இரட்டைச் சதம்: 2-வது இன்னிங்ஸில் இலங்கை போராட்டம்

இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி தனது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :17 ஜனவரி 2021, 3:10 am


இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி தனது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் காலேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 168 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பட்லர் 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய சாம் கரண் மற்றும் டாம் பெஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். எனினும் கேப்டன் ரூட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதத்தை எட்டினார். டெயிலண்டர்கள் ஒத்துழைப்பு தராததால் ரூட் கடைசி விக்கெட்டாக 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், இங்கிலாந்து 117.1 ஓவர்களில் 421 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்த முறை தொடக்க ஆட்டக்காரர்கள் குசால் பெரேரா மற்றும் லஹிரு திரிமான்னே ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் பெரேரா 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, நைட் வாட்ச்மேனாக லசித் எம்புல்டேனியா களமிறக்கப்பட்டார்.

இதன்பிறகு, 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேற்கொண்டு விக்கெட் விழவில்லை. இலங்கை அணி 61 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. திரிமான்னே 76 ரன்களுடனும், எம்புல்டேனியா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இலங்கை அணி இன்னும் 130 ரன்கள் பின்தங்கியுள்ளது.