காலே: இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையின் காலே நகரில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
இங்கிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி இலங்கையின் காலே நகரில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இலங்கை அணியைப் பொருத்தவரையில் ஏஞ்செலோ மேத்யூஸ் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியிருக்கிறார். இவ்விரு அணிகளும் இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து 15 வெற்றிகளையும், இலங்கை 8 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 11 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இந்தப் போட்டி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இலங்கை (உத்தேச லெவன்): திமுத் கருணாரத்னே (கேப்டன்), குசல் பெரேரா, குசல் மென்டிஸ்/லஹிரு திரிமானி, தினேஷ் சன்டிமல், ஏஞ்செலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), தாசன் ஷனகா, வனிந்து ஹசரங்கா, தில்ருவன் பெரேரா, லசித் எம்புல்டெனியா, சுரங்கா லக்மல்/விஸ்வா பெர்னாண்டோ.
இங்கிலாந்து (உத்தேச லெவன்): டாம் சிப்லே, ஜக் கிராவ்லே, ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட் (கேப்டன்), டேன் லாரன்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாம் கரன், டாம் பெஸ், ஜேக் லீச், மார்க்வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன்/ஸ்டூவர்ட் பிராட்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

