இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு திங்கள்கிழமை பெண் குழந்தை பிறந்தது.
விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கர்ப்பமான அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரியில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியத் தொடரில் விளையாடி வந்த விராட் கோலி, அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தை முடித்த பிறகு விடுப்பில் நாடு திரும்பினார்.
அனுஷ்கா சர்மாவுக்கு திங்கள்கிழமை பெண் குழந்தை பிறந்தது. தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை ட்விட்டரில் அறிவித்த கோலி, எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அனைவருடைய அன்புக்கும் பிரார்த்தனைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. தாயும், சேயும் நலமாக உள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி, விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியருக்கு இன்ஸ்டகிராமில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஒரு குழந்தையின் கால் தெரிகிற மாதிரியான ஒரு புகைப்படத்தையும் கூடவே பகிர்ந்தார். அந்தக் குழந்தை தான் கோலியின் குழந்தை என ரசிகர்கள் எண்ணிக்கொண்டார்கள். இதையடுத்து விகாஸ் கோலி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அனுஷ்கா, கோலியை வாழ்த்துவதற்காக நான் பகிர்ந்த புகைப்படம், விராட் கோலியின் குழந்தையுடன் தொடர்பில்லாதது. சில ஊடகங்கள் குறிப்பிட்டது போன்று அது கோலியின் குழந்தை அல்ல. எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்கிறேன் என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


