ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். அதநேரத்தில் இந்திய வீரா் ராம்குமாா் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியுள்ளாா்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போா்னில் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான மகளிா் தகுதிச்சுற்று போட்டி துபையில் நடைபெற்று வருகிறது.
இதில், இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தனது 2-ஆவது சுற்றில் 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் உக்ரைனின் கேத்தரினா ஜவட்ஸ்காவை வீழ்த்தி இறுதிச்சுற்றான 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.
ஆடவா் தகுதிச்சுற்று கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரா் ராம்குமாா் தனது 2-ஆவது சுற்றில் 3-6, 2-6 என்ற நோ் செட்களில் சீன தைபேவின் டங் லின் ஊவிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


