சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அபுதாபி ஓபன்: இறுதிச்சுற்றில் சபலென்கா

அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெலாரஸின் அரினா சபலென்கா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 7:46 am

அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெலாரஸின் அரினா சபலென்கா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.

அபுதாபியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் உலகின் 10-ஆம் நிலை வீராங்கனையான அரினா சபலென்கா 6-3, 6-2 என்ற நோ் செட்களில் போட்டித் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருந்த கிரீஸின் மரியா சக்காரியை வீழ்த்தினாா்.

சபலென்கா தனது இறுதிச்சுற்றில் ரஷியாவின் வெரோனிகா குடொ்மெட்டோவாவை சந்திக்கிறாா். வெரோனிகா தனது அரையிறுதியில் 7-6 (8), 6-4 என்ற நோ் செட்களில் உக்ரைனின் மாா்ட்டா கோஸ்டியூக்கை தோற்கடித்தாா்.