2 சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது 2-ஆவது இன்னிங்ஸில் 131 ஓவர்கள் பேட் செய்தது. கடந்த 41 ஆண்டுகளில் 4-ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி அதிக ஓவர்கள் பேட் செய்த போட்டி இதுதான். இதற்கு முன்னர் 1979-இல் டெல்லியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 131 ஓவர்கள் பேட் செய்துள்ளது. 1979-இல் இங்கிலாந்துக்கு எதிராக 150.5 ஓவர்கள் பேட் செய்ததே 4-ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி அதிக ஓவர்கள் பேட் செய்த போட்டியாகும்.
6சிட்னி டெஸ்டில் டிரா செய்ததன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 130 ஓவர்களுக்கு மேல் பேட் செய்து அந்தப் போட்டியை டிரா செய்த 6-ஆவது அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது இந்தியா.
256 ஹனுமா விஹாரி-அஸ்வின் ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு பேட் செய்தபோது 256 பந்துகளை எதிர்கொண்டது. இதன்மூலம் 4-ஆவது இன்னிங்ஸில் 6-ஆவது விக்கெட்டுக்கு அதிக பந்துகளை எதிர்கொண்ட ஜோடிகள் வரிசையில் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 1999-இல் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட்-ஜஸ்டின் லாங்கர் ஜோடி 353 பந்துகளை எதிர்கொண்டதே இன்றளவும் சாதனையாக உள்ளது.
3 நான்காவது இன்னிங்ஸில் 6-ஆவது விக்கெட்டுக்கு அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய ஜோடிகள் வரிசையில் ஹனுமா விஹாரி-அஸ்வின் ஜோடி 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 2018-இல் இங்கிலாந்துக்கு எதிராக கே.எல்.ராகுல்-ரிஷப் பந்த் ஜோடி 267 பந்துகளையும், 1999-இல் சச்சின் டெண்டுல்கர்-நவ்ஜோத் சிங் சித்து ஜோடி 266 பந்துகளையும் எதிர்கொண்டு முறையே முதல் இரு இடங்களில் உள்ளன.
148 புஜாரா-ரிஷப் பந்த் ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 148 ரன்கள் குவித்தது. ஒரு டெஸ்டில் 4-ஆவது இன்னிங்ஸில் 4-ஆவது விக்கெட்டுக்கு இந்திய ஜோடி குவித்த அதிகபட்ச ரன் இதுதான். 72 ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் ஹஸôரே-ருசி மோடி ஜோடி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 4-ஆவது இன்னிங்ஸில் 139 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. அதை புஜாரா-பந்த் ஜோடி தகர்த்துள்ளது.
97 ரிஷப் பந்த் 97 ரன்கள் குவித்ததன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 4-ஆவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 1975-இல் அடிலெய்டில் இங்கிலாந்தின் ஆலன் நாட் ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் குவித்ததே இன்றளவும் சாதனையாக உள்ளது.
3 கடைசி நாளான திங்கள்கிழமை இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. 2001-க்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் கடைசி நாளில் 3 விக்கெட்டுகள் மட்டுமே விழுவது இது 2-ஆவது முறையாகும்.
128 அஸ்வின் 128 பந்துகளை எதிர்கொண்டார். இதன்மூலம் 4-ஆவது இன்னிங்ஸில் 7-ஆவது வீரராக களமிறங்கி அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய பேட்ஸ்மேன்களின் வரிசையில் 5-ஆவது இடத்தைப் பிடித்தார் அஸ்வின்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

