புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு திங்கள்கிழமை பிற்பகலில் பெண் குழந்தை பிறந்தது.
விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017-இல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கர்ப்பமான அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரியில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வந்த விராட் கோலி, அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை முடித்த பிறகு விடுப்பில் நாடு திரும்பினார்.
இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவுக்கு திங்கள்கிழமை பிற்பகலில் பெண் குழந்தை பிறந்தது. தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை சுட்டுரை மூலம் அறிவித்துள்ள கோலி, "எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அனைவருடைய அன்புக்கும், பிரார்த்தனைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. தாயும், சேயும் நலமாக உள்ளனர்' என குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், ஹார்திக் பாண்டியா உள்ளிட்ட பிரபலங்கள் ஏராளமானோர் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


