3-வது டெஸ்டில் காயமடைந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு சிட்னியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.
டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது. 407 வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 131 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. இதனால் சிட்னி டெஸ்ட் டிரா ஆகியுள்ளது. ரோஹித் சர்மா 52, புஜாரா 77, ரிஷப் பந்த் 97, அஸ்வின் 39, விஹாரி 23 ரன்கள் எடுத்தார்கள். கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகிறது.
ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகியுள்ளார்கள். 3-வது டெஸ்டில் ஜடேஜா பேட்டிங் செய்தபோது, கம்மின்ஸ் வீசிய பவுன்சா், ஜடேஜாவின் இடது கை பெருவிரலைப் பதம் பாா்த்தது. இதையடுத்து அவர் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சிட்னியில் ஜடேஜாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஜடேஜா. அறுவை சிகிச்சையால் சிறிது நாளைக்கு விளையாட முடியாது. மீண்டும் பழைய உற்சாகத்துடன் திரும்பி வருவேன் என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


