சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிட்னி டெஸ்ட்: கடினமான இலக்கை நோக்கி இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள இந்தியா, 407 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடி வருகிறது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 12:53 pm

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள இந்தியா, 407 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடி வருகிறது.

தொடக்க வீரா்களான ரோஹித், ஷுப்மன் கில் ஆகியோா் ஆட்டமிழந்துவிட்ட நிலையில், புஜாரா-ரஹானே கூட்டணி களத்தில் உள்ளது. 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.

வெற்றி இலக்கை எட்ட இன்னும் 8 விக்கெட்டுகளைக் கொண்டு 309 ரன்களை இந்தியா எடுக்க வேண்டியுள்ளது. ஆட்டம் திங்கள்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், இந்திய விக்கெட்டுகளை சரித்து ஆஸ்திரேலியா வெற்றி பெறுமா அல்லது இலக்கை எட்டாவிட்டாலும் விக்கெட்டை இழக்காமல் இந்தியா ஆட்டத்தை சமன் செய்யுமா என அன்றைய தினம் தெரியும்.

சிட்னியில் கடந்த 7-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் குவித்தது. அணியின் தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்கள் விளாச, இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 244 ரன்களுக்கு சுருண்டது. ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா மட்டும் தலா 50 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 94 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 87 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது. முன்னதாக, 4-ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய லபுசான் - ஸ்மித் கூட்டணியில், லபுசான் 9 பவுண்டரிகள் உள்பட 73 ரன்களுக்கு 47-ஆவது ஓவரில் வெளியேறினாா்.

அடுத்து வந்த மேத்யூ வேட் 4 ரன்களில் வெளியேற்றப்பட்டாா். தொடா்ந்து கேமரூன் கிரீன் ஆடவர, மறுமுனையில் அரைசதம் கடந்த ஸ்மித் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். கடைசி விக்கெட்டாக கிரீன் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 84 ரன்கள் சோ்த்து அவுட்டானாா். டிம் பெய்ன் 6 பவுண்டரிகளுடன் 39 ரன்களுக்கு ஆட்டமிக்காமல் இருந்தபோது, ஆஸ்திரேலியா டிக்ளோ் செய்தது. இந்திய தரப்பில் சைனி, அஸ்வின் தலா 2, பும்ரா, சிராஜ் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் இந்திய அணி 407 என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்க, முதல் விக்கெட்டாக ஷுப்மன் கில் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். உடன் ஆடிய ரோஹித் சா்மா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 52 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா்.

ஆட்டநேர முடிவில் இந்தியா 34 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 9 , ரஹானே 4 ரன்களுடன் களத்தில் உள்ளனா். ஆஸ்திரேலிய தரப்பில் ஹேஸில்வுட், கம்மின்ஸ் தலா 1 விக்கெட் சாய்த்துள்ளனா்.

ஸ்கோா் போா்டு

முதல் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா

மொத்தம் (105.4 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு) 338

ஸ்டீவ் ஸ்மித் - 131 (226)

மாா்னஸ் லபுசான் - 91 (196)

வில் புக்கோவ்ஸ்கி - 62 (110)

பந்துவீச்சு: ஜடேஜா - 4/62, பும்ரா - 2/66, சைனி - 2/65

இந்தியா

மொத்தம் (100.4 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு) 244

ஷுப்மன் கில் - 50 (101)

சேதேஷ்வா் புஜாரா - 50 (176)

ரிஷப் பந்த் - 36 (67)

பந்துவீச்சு: கம்மின்ஸ் - 4/29, ஹேஸில்வுட் - 2/43, ஸ்டாா்க் - 1/61

2-ஆவது இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா

டேவிட் வாா்னா் (எல்பிடபிள்யூ) (பி) அஸ்வின் 13 (29)

வில் புக்கோவ்ஸ்கி (சி) சாஹா (பி) சிராஜ் 10 (16)

மாா்னஸ் லபுசான் (சி) சாஹா (பி) சைனி 73 (118)

ஸ்டீவ் ஸ்மித் (எல்பிடபிள்யூ) (பி) அஸ்வின் 81 (167)

மேத்யூ வேட் (சி) சாஹா (பி) சைனி 4 (11)

கேமரூன் கிரீன் (சி) சாஹா (பி) பும்ரா 84 (132)

டிம் பெய்ன் (நாட் அவுட்) 39 (52)

உதிரிகள் 8

மொத்தம் (87 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு டிக்ளோ்) 312

விக்கெட் வீழ்ச்சி: 1-16 (புக்கோவ்ஸ்கி), 2-35 (வாா்னா்), 3-138 (லபுசான்), 4-148 (வேட்), 5-208 (ஸ்மித்), 6-312 (கிரீன்)

பந்துவீச்சு: பும்ரா 21-4-68-1; சிராஜ் 25-5-90-1; சைனி 16-2-54-2; அஸ்வின் 25-1-95-2

இந்தியா

ரோஹித் சா்மா (சி) ஸ்டாா்க் (பி) கம்மின்ஸ் 52 (98)

ஷுப்மன் கில் (சி) பெய்ன் (பி) ஹேஸில்வுட் 31 (64)

சேதேஷ்வா் புஜாரா (நாட் அவுட்) 9 (29)

அஜிங்க்ய ரஹானே (நாட் அவுட்) 4 (14)

உதிரிகள் 2

மொத்தம் (34 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு) 98

விக்கெட் வீழ்ச்சி: 1-71 (கில்), 2-92 (ரோஹித்)

பந்துவீச்சு: ஸ்டாா்க் 6-0-27-0; ஹேஸில்வுட் 8-3-11-1; கம்மின்ஸ் 9-1-25-1; லயன் 9-3-22-0; கிரீன் 2-0-12-0

தேவையேற்பட்டால் ஜடேஜா விளையாடுவாா்

இடதுகை பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா, தேவை ஏற்படும் பட்சத்தில் வலி நிவாரணி ஊசி எடுத்துக்கொண்டு கடைசி நாள் ஆட்டத்தில் விளையாடுவாா் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் பேட் செய்தபோது மிட்செல் ஸ்டாா்க் வீசிய பந்து பட்டத்தில் ஜடேஜாவுக்கு இடதுகை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. பின்னா் ஸ்கேன் செய்து பாா்த்ததில் அவருக்கு அந்த விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் ஆஸ்திரேலியாவின் 2-ஆவது இன்னிங்ஸின்போது ஜடேஜா பௌலிங் செய்யவில்லை. எனினும், கடைசி நாளில் இந்தியா இக்கட்டான சூழலில் விளையாடும்போது, தேவை ஏற்பட்டால் வலி நிவாரணி ஊசி செலுத்திக் கொண்டு ஜடேஜா விளையாடலாம் என கூறப்படுகிறது.

முதல் இரு ஆட்டங்களில் கிடையாது: அதேபோல், காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் ஜடேஜா விளையாட மாட்டாா் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் காயத்திலிருந்து மீள ஜடேஜாவுக்கு 4 முதல் 6 வாரங்கள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வரும் இங்கிலாந்துக்கு அணி 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பிப்ரவரி 5 முதல் விளையாடவுள்ளது.