சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் காலின் மெக்டொனால்ட் காலமானார்

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் காலின் மெக்டொனால்ட் காலமானார். அவருக்கு வயது 92.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:52 pm


ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் காலின் மெக்டொனால்ட் காலமானார். அவருக்கு வயது 92.

ஆஸ்திரேலிய அணியின் 191-வது டெஸ்ட் வீரரான மெக்டொனால்ட், 47 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய அணி மிகச்சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக மதிப்பிடப்பட்டார். 

1952-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அறிமுகமானார் மெக்டொனால்ட். 5 சதங்களுடன் 3,107 ரன்கள் எடுத்தார். சராசரி - 39.32. 

ஓய்வு பெற்ற பிறகு ஆசிரியராகவும் வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார். 

மெக்டொனால்டின் மறைவுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா இரங்கல் தெரிவித்துள்ளது.