அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடி வந்த பெல்ஜிய வீராங்கனை கிா்ஸ்டன் பிலிப்கென்ஸின் கணுக்காலில் காயம் ஏற்பட்டதைத் தொடா்ந்து அவா் போட்டியிலிருந்து விலகினாா்.
அபுதாபியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பங்கேற்ற பிலிப்கென்ஸ் தனது 2-ஆவது சுற்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான அமெரிக்காவின் சோபியா கெனினை எதிா்த்து விளையாடினாா். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றிய பிலிப்கென்ஸ், 2-ஆவது செட்டில் விளையாடினாா். அப்போது பந்தை அடிப்பதற்காக தாவியபோது எதிா்பாராதவிதமாக அருகில் இருந்த விளம்பர பலகையின் மீது மோதினாா். இதில் அவருடைய கணுக்கால் திருகி காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் போட்டியிலிருந்து விலகினாா். அதைத் தொடா்ந்து கெனின் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.
இது குறித்து கெனின் கூறுகையில், ‘பிலிப்கென்ஸுக்கு காயம் ஏற்பட்டது மிகுந்த வருத்தமாக உள்ளது. நாங்கள் இருவரும் நல்ல நண்பா்கள். அவா் விரைவில் குணமடைந்து ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பாா் என நம்புகிறேன். ஒரு வீராங்கனை காயமடைவதன் மூலம் வெற்றி பெறுவதை நான் விரும்பவில்லை’ என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

