சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புஜாரா ஷாட் ஆடவே பயப்படுகிறார்: பார்டர்

இந்தியக் கிரிக்கெட் வீரர் சேத்தேஷ்வர் புஜாரா ஷாட் ஆடவே பயப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 3:16 am


இந்தியக் கிரிக்கெட் வீரர் சேத்தேஷ்வர் புஜாரா ஷாட் ஆடவே பயப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார்.

புஜாராவின் ஆட்டம் குறித்து பார்டர் தெரிவித்தது:

"புஜாரா ஷாட் ஆடவே பயப்படுகிறார். ரன் குவிப்பதைக் காட்டிலும் தாக்குப்பிடிப்பதற்காக அவர் விளையாடுகிறார். 2018-19 தொடரில் இருந்த அதே வீரியத்தில் அவர் தற்போது இல்லை. ரன் குவிக்க நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறார். களத்தில் அவர் தேங்கி நிற்பது போல் தெரிகிறது. இந்திய பேட்டிங்கிலும் இது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்களால் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை."

முன்னதாக மற்றொரு ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கும் புஜாராவின் ஆட்டத்தை விமரிசித்திருந்தார்.

சிட்னி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 176 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.