பாம்போலிம்: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வீழ்த்தியது.
இரு அணிகளும் தலா 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், ஒடிஸாவுக்கு இது முதல் வெற்றி; கேரளத்துக்கு இது 5-ஆவது தோல்வி.
கோவாவின் பாம்போலிம் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 9-ஆவது நிமிடத்தில் கேரள வீரா் ஜோா்டான் முா்ரே கோல் கணக்கைத் தொடங்கினாா். எனினும், கேரள வீரா் ஜிக்சன் சிங் 22-ஆவது நிமிடத்தில் தவறுதலாக ‘ஓன் கோல்’ அடித்து ஆட்டத்தை சமன் செய்தாா்.
42-ஆவது நிமிடத்தில் ஒடிஸா வீரா் ஸ்டீவன் டெய்லா் கோலடித்து முதல் பாதியில் 2-1 என அணியை முன்னிலைப்படுத்தினாா். 2-ஆவது பாதியில் 50 மற்றும் 60-ஆவது நிமிடங்களில் டியேகோ மௌரிசியோ அடித்த கோல்களால் ஒடிஸா முன்னிலை அதிகரித்தது.
ஆட்டத்தின் 79-ஆவது நிமிடத்தில் கேரள வீரா் கேரி ஹூப்பா் ஒரு கோலடிக்க, ஆட்டத்தின் முடிவில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது ஒடிஸா.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


