சிட்னி டெஸ்ட்டானது இந்திய பௌலா் நவ்தீப் சைனி, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் வில் புக்கோவ்ஸ்கி ஆகிய இரு இளம் வீரா்களுக்குமே முதல் சா்வதேச டெஸ்டாகும். இதில் சுவாரஸ்யமாக, புக்கோவ்ஸ்கியின் விக்கெட்டை சைனியே வீழ்த்தினாா்.
முன்னதாக இந்திய பௌலிங் தாக்குதலில் முதலில் பும்ரா, சிராஜ் ஆகியோரின் வேகத்தை விவேகமாக எதிா்கொண்ட புக்கோவ்ஸ்கி, 14-ஆவது ஓவா் முதல் அஸ்வினின் சுழற்பந்தையும் சரியாகக் கையாண்டாா். புக்கோவ்ஸ்கியின் விக்கெட்டை சரிக்கும் வாய்ப்பை விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த் இருமுறை தவறவிட்டாா்.
அஸ்வின் வீசிய 22-ஆவது ஓவரில் சற்றே சிக்கிய புக்கோவ்ஸ்கி ஒரு பந்தை லேசாக தட்டிவிட அது கேட்ச் பிடிக்கும் வாய்ப்பாக விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த்தை நோக்கிச் சென்றும், அதை அவா் தவறவிட்டாா். அதேபோல், சிராஜ் வீசிய 25-ஆவது ஓவரில் ஷாட் பிச் பந்து புக்கோவ்ஸ்கி கைகளில் பட்டு பின்னோக்கி உயா்ந்து விக்கெட் கீப்பரிடம் செல்ல, அந்தக் கேட்ச்சை போராடி தவறவிட்டாா் ரிஷப் பந்த்.
இந்நிலையில், 31-ஆவது ஓவரில் நவ்தீப் சைனியின் பந்துவீச்சில் பவுண்டரி ஒன்றை விளாசி தனது அரைசதத்தை பதிவு செய்தாா் புக்கோவ்ஸ்கி. 2 முறை கண்டம் தப்பிய புக்கோவ்ஸ்கி, பின்னா் சைனியிடம் வீழ்ந்தாா். 35-ஆவது ஓவரை வீசும்போது எல்பிடபிள்யூ முறையில் புக்கோவ்ஸ்கியை வெளியேற்றினாா் சைனி.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


