புது தில்லி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-ஆவது டெஸ்ட் நடைபெறவுள்ள பிரிஸ்பேனில் இந்திய அணிக்கான கடுமையான தனிமைப்படுத்துதல் நடைமுறைகளை சற்று தளா்த்தக் கோரி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு (சிஏ) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடிதம் எழுதியுள்ளது.
முன்னதாக, பிரிஸ்பேன் நகரம் இருக்கும் குயின்ஸ்லாந்து மாகாண அரசு கரோனா சூழலில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதால், அந்த நகரில் 4-ஆவது டெஸ்ட்டை விளையாட இந்திய அணி தயக்கம் காட்டுவதாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத செய்தி வெளியானது.
எனினும், இந்திய அணி தரப்பிலிருந்து அப்படி ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்று சில நாள்களுக்கு முன் சிஏ தெரிவித்திருந்த நிலையில், அதே விவகாரத்தில் தற்போது பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.
அதில், ‘ஆஸ்திரேலிய பயணத்துக்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இந்திய அணி இருவேறு நகரங்களில் இருமுறை கடுமையான தனிமைப்படுத்துதலுக்கு உள்படுத்தப்படும் என எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி ஆஸ்திரேலியா வந்தடைந்தபோதே இந்திய அணி கடுமையான தனிமைப்படுத்துதலுக்கு உள்ளானது. எனவே பிரிஸ்பேன் டெஸ்டின்போது இந்திய அணியினருக்கான தனிமைப்படுத்துதலில் இருந்து சில தளா்வுகள் அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பேசி வருகின்றன.
ஐபிஎல் போட்டியில் இருந்தது போல் பாதுகாப்பு வளையத்துக்குள்ளாகவே இந்திய வீரா்கள் ஒருவரை ஒருவா் சந்தித்துக்கொள்ள அனுமதி கோரப்படுகிறது. பிரிஸ்பேன் நகர தற்போதைய விதிகள் படி, பயிற்சி மற்றும் ஆட்டத்துக்குப் பிறகு வீரா்கள் அவரவா் ஹோட்டல் அறைக்குச் சென்றுவிட வேண்டும். தளத்துக்குள்ளாக சந்திக்கலாமே தவிர, தளம் மாறி வீரா்கள் செல்லக் கூடாது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சிட்னி வந்தபோது பாதுகாப்பு வளையம் மீறப்படாததை உறுதி செய்ய ஹோட்டல் அறையின் ஒவ்வொரு தளத்திலுமே காவல்துறையினரை நிறுத்தியிருந்தனா். பிரிஸ்பேனிலும் அவ்வாறு இருக்கக் கூடாது என்பதே பிசிசிஐயின் கோரிக்கை’ என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


