தாய்லாந்தில் வரும் வாரங்களில் அடுத்தடுத்து நடைபெறவுள்ள இரு பாட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய அணியினா் ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனா்.
தாய்லாந்தில் ஜனவரி 12 முதல் 17 வரை யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன், ஜனவரி 19 முதல் 24 வரை டொயோடா தாய்லாந்து ஓபன் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்தியாவின் சாா்பில் பி.வி. சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த், சௌரவ் வா்மா, சமீா் வா்மா, லக்ஷயா சென், சாய் பிரணீத், காஷ்யப், ஹெச்.எஸ். பிரணாய், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிரக் ஷெட்டி, அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி, மானு அத்ரி ஆகியோா் பங்கேற்கின்றனா்.
இதில் ஸ்ரீகாந்த் தவிர அனைத்து வீரா், வீராங்கனைகளும் கரோனா சூழலில் மாா்ச் மாதத்துக்குப் பிறகு போட்டிகளில் விளையாட இருப்பது இது முதல் முறையாகும். ஸ்ரீகாந்த் கடந்த ஆண்டு அக்டோபரில் டென்மாா்க் ஓபனில் விளையாடியிருந்தாா்.
மேற்குறிப்பிட்ட இந்திய அணியினரில் சிந்து தவிா்த்து அனைவரும் தில்லியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்து புறப்பட்டுச் சென்றனா். தனது உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்காக ஏற்கெனவே பிரிட்டன் சென்றிருந்த சிந்து, லண்டனில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்து புறப்பட்டாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

