இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலிக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 14-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்தடைந்தது.
இலங்கை புறப்படுவதற்கு முன் அனைத்து வீரர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை என்பதே கண்டறியப்பட்டது.
ஆனால், ஹம்பந்தோட்டா விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மொயீன் அலிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மொயீன் அலியுடன் கிறிஸ் வோக்ஸ் நெருக்கமாக இருந்ததாகத் தெரிகிறது. எனவே அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளார். மேலும் அவருக்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இங்கிலாந்து வீரர்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை 2-வது பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய சூழலில் இங்கிலாந்து வீரர்கள் புதன்கிழமை பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


