பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் நியூஸிலாந்து அணியில் நீல் வாக்னருக்குப் பதிலாக மட் ஹென்றி சோ்க்கப்பட்டுள்ளாா்.
பாகிஸ்தான் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
இந்தப் போட்டியின் 2-ஆவது நாளில் நியூஸிலாந்து வீரா் நீல் வாக்னா் பேட் செய்தபோது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளா் ஷாகீன் அப்ரிதி வீசிய யாா்க்கா் பந்து வாக்னரின் வலது காலை பதம்பாா்த்தது. இதில் அவருடைய இரு விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நீல் வாக்னா் காயத்திலிருந்து மீள்வதற்கு 6 வாரங்கள் வரை ஆகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையடுத்து கிறைஸ்ட்சா்ச்சில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ள 2-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் நியூஸிலாந்து அணியில் நீல் வாக்னருக்குப் பதிலாக மட் ஹென்றி சோ்க்கப்பட்டுள்ளாா்.
நியூஸிலாந்து அணி விவரம்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளன்டெல், டிரென்ட் போல்ட், மட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லதாம், டேரில் மிட்செல், ஹென்றி நிகோலஸ், மிட்செல் சேன்ட்னா், டிம் சௌதி, ராஸ் டெய்லா், பி.ஜே.வாட்லிங் (விக்கெட் கீப்பா்), வில் யங்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

