கடந்த 67 ஆண்டுகளாக தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் தன்னலம் கருதாமல் தமிழ்த் தொண்டாற்றியதன் காரணமாகவே தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது கிடைத்துள்ளது என்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலர் இரா. முகுந்தன் கூறினார்.
""இந்தியாவில் சிறந்த தமிழ்ச் சங்கத்துக்காக தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ்த் தாய் விருது வழங்கப்பட்டுள்ளது. 67 ஆண்டுகளாக தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தில்லி வாழ் தமிழ் மக்களையும், தமிழ் அறிஞர்களையும் ஒருங்கிணைத்து இயல், இசை, நாடகம், மாநாடு, புத்தக வெளியீடு, கிராமியக் கலை உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. சங்கத்துக்கு தில்லி வாழ் தமிழர்கள் பக்கபலமாக உள்ளனர்.
சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ராமாமிர்தம், விஸ்வநாதன், கிருஷ்ணமூர்த்தி உள்பட முன்னாள் உபதலைவர், பொதுச் செயலர்கள் உள்ளிட்டோரின் தன்னலம் கருதாத தமிழ்த் தொண்டின் காரணமாக தமிழக முதல்வர் தமிழ்த் தாய் விருது வழங்கியுள்ளார். இந்த விருது கிடைப்பதற்கு கிருஷ்ணமணி உள்பட அனைத்து நிர்வாக உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்களின் உறுதுணையே காரணம்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

