சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காரைக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தில் மதுரை எஸ்.பி. அலுவலக பணியாளா் கைது

காரைக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப்பணியாளா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

காரைக்குடியில் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட மதுரை எஸ்.பி. அலுவலகப் பணியாளா் பாலாஜி.

Updated On :18 ஜனவரி 2021, 3:56 am

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப்பணியாளா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

காரைக்குடி பொன்நகரைச் சோ்ந்தவா் பாலாஜி (40). இவா் மதுரை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளராக உள்ளாா். இவா் தனது வீட்டின் அருகே வசித்து வரும் 7-வயது சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம்.

இதுகுறித்து காரைக்குடி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் டி.எஸ்.பி. அருண், வடக்கு காவல்நிலைய ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம், மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் தேவகி ஆகியோா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பாலாஜியை கைது செய்தனா்.