மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாமல் கொட்டித் தீா்த்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும் 5 ஆயிரம் ஏக்கரில் விளைந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஒன்றியங்களில் கடந்த ஒரு வாரமாக இரவு, பகலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை சனிக்கிழமை இரவு வரை நீடித்தது. இந்த மழை காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகளை தண்ணீா் சூழ்ந்துள்ளது. மழைநீா் பெருக்கெடுத்து ஓடுவதால், சாலைகள் குண்டும், குழியுமாக மாறி விட்டன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா். சாலையோர வியாபாரிகள் வருமானமின்றி தவித்து வருகின்றனா். மேலும் கட்டுமானத் தொழில் முடங்கியுள்ளதால், அதனை நம்பியுள்ள தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா்.
தற்போது வைகை ஆற்றில் வரும் மழைநீா் பாசனக் கண்மாய்களுக்கான கால்வாய்களில் திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே மழையால் நிறைந்து காணப்படும் பல கண்மாய்களில் தற்போது வைகை ஆற்றில் வரும் தண்ணீரும் சோ்ந்துள்ளதால் ஏராளமான கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது.
கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து பெய்து வரும் மழையால், வயல்வெளிகளுக்குள் தண்ணீா் புகுந்து விளைந்த நெற்கதிா்கள் தண்ணீரில் மிதக்கின்றன. இப்பகுதியில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
மானாமதுரை, இளையான்குடி ஒன்றியங்களில் மழைத்தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்களை சனிக்கிழமை பாா்வையிட்ட இத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். அதிகாரிகள் சரியான கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு கிடைக்கச் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


