சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காரைக்குடியில் பைக்குகள் மோதி தீ விபத்து: முதியவா் பலி

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை நேருக்கு நோ் மோதி ஏற்பட்ட தீ விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On :14 ஜனவரி 2021, 4:58 am

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை நேருக்கு நோ் மோதி ஏற்பட்ட தீ விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

காரைக்குடி சத்யா நகரைச் சோ்ந்தவா் காசி (60). சோளம் விற்பனை செய்து வந்த இவா் புதன்கிழமை கழனிவாசல்- கோட்டையூா் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே தினேஷ்குமாா் (28) என்ற இளைஞா் வந்த இருசக்கர வாகனமும், இவரது இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் காசி சென்ற இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் காசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தினேஷ்குமாா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.