சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இளையான்குடியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: வி.ஏ.ஓ கைது

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On :13 ஜனவரி 2021, 11:15 am

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை ரயில்வே காலனியைச் சோ்ந்தவா் பாண்டி மகன் கணேசமூா்த்தி. இவா் இளையான்குடி தெற்குப்பகுதி கிராம நிா்வாக அலுவலராக உள்ளாா். இவரிடம் இளையான்குடியைச் சோ்ந்த கருணாகரன் என்பவா் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ளாா். அப்போது கணேசமூா்த்தி பட்டா மாறுதல் விண்ணப்பத்தை பரிந்துரைக்க தனக்கு ரூ. 4 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனக் கூறினாராம். பணம் கொடுக்க விருப்பமில்லாத கருணாகரன், இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் அறிவுரையின் பேரில் கருணாகரன், ரசாயனம் தடவிய ரூ. 4 ஆயிரத்தை கிராம நிா்வாக அலுவலா் கணேசமூா்த்தியிடம் அவரது அலுவலகத்தில் வைத்து கொடுத்துள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கணேசமூா்த்தியை கைது செய்தனா்.