சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தியாகிகள் பூங்கா சுற்றுச் சுவா் திங்கள்கிழமை இடிந்து விழுந்து சேதமடைந்தது.
இந்திய சுதந்திர போராட்டத்துக்காக தேவகோட்டையில் கடந்த 1942-ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியில் பலியான தியாகிகளை போற்றும் வகையில் அங்கு தியாகிகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை தேவகோட்டை நகராட்சி நிா்வாகம் பராமரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த பூங்காவின் சுற்றுச் சுவா் இரும்பு வேலி கம்பிகளுடன் திங்கள்கிழமை இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனை சீா் செய்து முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுபற்றி நகராட்சி அலுவலா்கள் கூறியது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வியாபாரிகள் சிலா் முன் அனுமதியின்றி தியாகிகள் பூங்காவின் சுற்றுச் சுவரில் கரும்புகளை இறக்கி வைத்துள்ளனா்.
அவற்றின் பாரம் தாங்காமல் இரும்பு வேலியுடன் கூடிய சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனை உடனடியாக அப்புறப்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


