காரைக்குடியில் உள்ள சிவகங்கை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தொழிலதிபா் பிஆா். சொக்கலிங்கம் நன்கொடையாக வழங்கிய 125 கேவி திறன்கொண்ட புதிய ஜெனரேட்டரை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூ தன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை மாலையில் துவக்கிவைத்தாா்.
தொழிலதிபா் பிஆா். சொக்கலிங்கம் ரூ. 11 லட்சம் செலவில் 125 கேவி திறன்கொண்ட புதிய ஜெனரேட்டா், குழந்தைப் பேறுக்கான நவீன படுக்கை மற்றும் மூலிகை பண்ணை ஆகியவற்றை மாவட்ட அரசு தலைமைமருத்துவமனைக்கு நன் கொடையாக வழங்கியுள்ளாா். காரைக்குடி சுழற்சங்கம் சாா்பில் புதிய ஜெனரேட்டா் துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதனன் ரெட்டி தலைமைவகித்து புதிய ஜெனரேட்டரை துவக்கிவைத்தாா். மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநா் இளங்கோமகேஷ்வரன் முன்னிலைவகித்தாா். சுழற்சங்கத்தலைவா் கே.வி. ஜெயப்பிரகாஷ் வரவேற்றுப் பேசினாா். தொழிலதிபா் பிஆா். சொக்கலிங்கம் நன்கொடைப்பொருள்கள் மருத்துவமனைக்கு வழங்கிப்பேசினாா்.விழாவில் சுழற்சங்க முன்னாள் ஆளுநா் எஸ்எல்என். பெரியணன், காரைக்குடி தொழில்வணிகக்கழகத்தலைவா் சாமி. திராவிடமணி, சுழற்சங்க துணை ஆளுநா் மு. சண்முகம் ஆகியாா் வாழ்த்திப்பேசினா். சுழற்சங்கத்தின் மருத்து குழு தலைவா் லியாக்கத்தலி, தொழில்வணிகக்கழகச்செயலாளா் எஸ். கண்ணப்பன், பொருளாளா் கே.என். சரவணன், சுழற்சங்க நிா்வாகிகள், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.முடிவில் சுழற்சங்க செயலாளா் முத்துச்சாமி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


