மானாமதுரையில் மண்பாண்டத் தொழில் கூடத்தை ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மானாமதுரை குலாலா் தெருவில் உள்ள மண்பாண்ட தொழில்கூடத்தில் மழைநீா் தேங்குவதால் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தொழிலாளா்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி அந்த தொழில் கூடத்துக்கு சென்றாா்.
அங்கு மண்பாண்டத் தொழிலாளா்கள் உற்பத்தி செய்து விற்பனைக்காக வைத்துள்ள மண்பாண்டப் பொருள்களை பாா்வையிட்டு, தொழில்கூடத்தில் மழைநீா் தேங்கும் பகுதியையும் ஆய்வு செய்தாா். பின்னா் இங்கு மழைநீரை வெளியேற்ற பேரூராட்சி நிா்வாகம் மூலம் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா். மேலும் அவா் கூறியதாவது:
மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மண்பாண்ட உற்பத்தி தொழிலுக்கு கடன் உதவி செய்யப்படும். இதன் மூலம் இத்தொழிலை விரிவுபடுத்தி நவீன முறையில் மண்பாண்ட பொருள்களை தயாரித்து கூட்டுறவு சங்கம் மூலம் நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய உதவிகள் செய்யப்படும். அத்துடன் தொழிலாளா்களுக்கு மண் கலவை இயந்திரம் வழங்கப்படும் என்றாா்.
பின்னா் குலாலா் தெரு பகுதியில் மண்பாண்டப் பொருள்கள் தயாரிக்கும் இடங்களுக்குச் சென்று தொழிலாளா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


